
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் மாவட்டம் ரம்பன் மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள ஜம்பா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அருகே இருந்த தரம்கண்ட் என்ற கிராமத்தை சூழ்ந்தது. மேலும், நிலச்சரிவால் கிராமத்தில் இருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் கிராமத்தில் இருந்த 100க்கும் மேற்பட்டோரை உயிருடன் மீட்டனர். அதேவேளை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் மாயமான நிலையில் அவரை தேடி வருகின்றனர்.