கர்நாடகா: பூணூல் அணிந்த மாணவருக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு; முதல்வர் பணியிடை நீக்கம்

2 hours ago 1

பிடார்,

கர்நாடகாவில் பிடார் மாவட்டத்தில் உள்ள சாய் ஸ்பூர்த்தி கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இளநிலை பொது நுழைவு தேர்வு (யு.ஜி.சி.இ.டி.) எழுதுவதற்காக சுசிவிரத குல்கர்னி என்ற மாணவர் சென்றுள்ளார். ஆனால், அந்த மாணவர் பூணூல் அணிந்திருக்கிறார் என்பதற்காக தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில், கல்லூரியின் முதல்வர் டாக்டர் சந்திரசேகர் பிராதர் மற்றும் பணியாளர் சதீஷ் பவார் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

அந்த மாணவருக்கு தேர்வு எழுதுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி குல்கர்னி கூறும்போது, கடந்த 17-ந்தேதி யு.ஜி.சி.இ.டி. கணித தேர்வு எழுத சென்றேன். ஆனால், என்னை பரிசோதனை செய்த கல்லூரி நிர்வாகம், பூணூலை அறுத்தெறியவும் அல்லது நீக்கவும் என கூறினர்.

அதன்பின்னரே, தேர்வுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தனர். 45 நிமிடங்களாக அவர்களிடம் தேர்வு எழுத அனுமதிக்கும்படி கெஞ்சினேன். இறுதியாக வீட்டுக்கு திரும்பி விட்டேன். கர்நாடக அரசு எனக்கு மறுதேர்வு நடத்த வேண்டும். அல்லது அரசு கல்லூரியில் எனக்கு சீட் தர வேண்டும் என கேட்டு கொண்டார்.

Read Entire Article