
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், 'ராயன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது. மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார்.
ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜுன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'போய்வா நண்பா' வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விவேகா எழுத, தனுஷ் பாடியுள்ளார்.