கனமழைக்கு உரிய நடவடிக்கை தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் பாராட்டு

3 months ago 15

மேட்டூர்: கன மழைக்கு சாத்தியமான வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரியில் அகில இந்திய கைத்தறி நெசவாளர்கள் நல சங்கம் சார்பில், நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வரும் சிறந்த நெசவாளர்கள் 100 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்கி பேசியதாவது:

நெசவுத் தொழிலுக்கு ஈடாக உலகின் சிறந்த தொழில் வேறு இல்லை. இளைஞர்கள் பணத்தை நோக்கி மட்டும் செல்லாமல், இந்த தொழிலை அர்ப்பணிப்போடு தொடர வேண்டும். நெசவாளர்கள் உருவாக்கும் ஆடைகள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது,கடவுளுக்கும் பயன்படுகிறது. நெசவாளர்களின் கோரிக்கைகள், பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து மத்திய அரசு மற்றும் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டியில், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைத்து விதமான சாத்தியமான வழிகளை அரசு செய்து வருகிறது. மழை பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன் என்றார்.

The post கனமழைக்கு உரிய நடவடிக்கை தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article