கோவை,அக்.17: சென்னையில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை – சென்னை சென்ட்ரல் இடையே (ரயில் எண்:- 12676) நேற்று மாலை 3.15 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து இரவு 10.07 மணிக்கு சுமார் 6.45 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோல், நேற்று மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் (ரயில் எண்:-12244) ‘சதாப்தி’ எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டது. மேலும் நேற்று காலை 6.20 மணிக்கு கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்ல வேண்டிய ‘இன்டர் சிட்டி’ எக்ஸ்பிரஸ் (எண். 12680) ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதுபோன்று சில ரயில்கள் திருவள்ளூரிலும், அரக்கோணத்திலும் குறுகிய நேரம் நிறுத்தப்பட்டன. நேற்று சேரன் எக்பிரஸ் ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.
பின்னர் அந்த ரயில் நேற்று இரவு அங்கு இருந்து கோவைக்கு புறப்பட்டு வந்தது.
The post கனமழை எதிரொலி கோவை – சென்னை 2 ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.