கந்தர்வகோட்டை, மார்ச் 19: கந்தர்வகோட்டை பகுதியில் வருவாய் அலுவலரை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாச்சியார் தலைமையில் மூன்று வருவாய் ஆய்வளர்கள் 34 கிராம நிர்வாக அலுவலர் இப்பகுதியில் பொதுமக்களிடம் நேரடியாக பணி செய்து வருகிறார்கள்.
கந்தர்வகோட்டை, கல்லாக் கோட்டை, புதுநகர் குறுவட்டத்திற்கு வருவாய் ஆய்வளர்கள் உள்ள நிலையில் அந்தந்த பகுதியில் அவர்களுக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டி தர வேண்டும் எனவும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உள்ளதுபோல் வருவாய் ஆய்வளர்களுக்கும் உதவியளர் நியமனம் செய்ய வேண்டும் என கிராமபுற விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கந்தர்வகோட்டை பகுதி வருவாய் அலுவலரை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.