'கத்தி' பட வெற்றி: அனிருத்திற்கு விஜய் என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?

3 months ago 13

சென்னை,

விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று 'கத்தி'. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 2014-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த 'கத்தி' திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன.

இது இப்படம் வெற்றிபெற முக்கிய பங்குவகித்தது. இதனை கொண்டாடும் வகையில், இப்படத்திற்கு இசையமைத்த அனிருத்திற்கு விஜய் பியானோ பரிசளித்திருந்தார். இப்படம் வெளிவந்து நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் கடைசி படமான 'தளபதி 69' படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்கிறார். எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article