
புதுச்சேரி,
2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், தொடர்ந்து பிற மாநிலங்களில் 2025-26-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழக பட்ஜெட் மார்ச் 14-ந் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதுச்சேரி சட்டசபை மார்ச் 10-ந் தேதி கூட இருக்கிறது. அதே மாதம் 12-ந் தேதி (புதன்கிழமை) 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் செல்வம் வெளியிட்டார்.
புதுச்சேரி மாநில பட்ஜெட்டை முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்ய இருக்கிறார். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். ரங்கசாமி தலைமையிலான இந்த அரசு பதவியேற்று தேர்தல் காலங்களைத் தவிரத்து இரண்டாவது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.