கண்ணாடி மாளிகை விவகாரம் கெஜ்ரிவால் மீதான புகாரில் ஒன்றிய அரசு நடவடிக்கை: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

1 week ago 3

புதுடெல்லி: கண்ணாடி மாளிகை விவகாரத்தில் கெஜ்ரிவால் மீதான புகாரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி தேர்தலில் பா.ஜ வென்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கட்டிய கண்ணாடி மாளிகை குறித்த விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ரோகினி தொகுதியில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ எம்.எல்.ஏவான விஜேந்தர் குப்தா, ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் இரண்டு புகார்களை அளித்து இருந்தார்.

அதில்,‘‘டெல்லி முதல்வராக இருந்த போது எட்டு ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மாளிகையை கட்டுவதற்காக கெஜ்ரிவால் கட்டிட விதிகளை மீறி உள்ளார். ராஜ்பூர் சாலையில் உள்ள பிளாட் எண்கள் 45, 47 மற்றும் இரண்டு பங்களாக்கள் அதாவது 8-ஏ மற்றும் 8பி, பிளாக் ஸ்டாப் சாலை உள்ளிட்ட அரசு சொத்துக்கள் இடிக்கப்பட்டு, அவர் கட்டிய புதிய இல்லத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு சரியான ஒப்புதல்களும் பெறப்படவில்லை’ என்று குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் பங்களா தொடர்பாக ஆய்வு நடத்தி வந்த ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம், பா.ஜ எம்.எல்.ஏ விஜேந்தர் குப்தா கொடுத்த புகாரை அடிப்படையாக கொண்டு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி அரசின் பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

The post கண்ணாடி மாளிகை விவகாரம் கெஜ்ரிவால் மீதான புகாரில் ஒன்றிய அரசு நடவடிக்கை: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article