கோத்தகிரி நேரு பூங்காவில் இன்று காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது

13 hours ago 3


ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் காய்கறி கண்காட்சியுடன் இன்று (3ம் தேதி) கோடை விழா துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கி ஒரு மாதம் நடக்கும். இம்முறை இன்று (3ம் தேதி) கோத்தகிரியில் நேரு பூங்காவில் 13வது காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. காலை 10 மணிக்கு துவங்கிய விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

காய்கறி கண்காட்சியை முன்னிட்டு பல ஆயிரம் டன் காய்கறிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் நேரு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பூங்கா முழுவதும் பல ஆயிரம் மலர் செடிகளில் பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இன்று துவங்கிய காய்கறி கண்காட்சி நாளையும் நடக்கிறது. இதனை நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வர். காய்கறி கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கோத்தகிரி பகுதிக்கு செல்லும் வகையில் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கப்படுகிறது.

நாய் கண்காட்சி
நாய் கண்காட்சி 9ம் தேதி துவங்கி 3 நாட்கள் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நடக்கிறது. 9ம் தேதி கீழ் படிதல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், காவல்துறை நாய்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படவுள்ள நாய்கள் பங்கேற்க உள்ளன. இதில், பீகில், டேக்சென்ட், ஜெர்மன் செப்பர்டு, லேப் போன்ற வகைகளை சேர்ந்த நாய்கள் போட்டிகளில் பங்கேற்கின்றன. மே 10, 11-ம் தேதி நாய்கள் கண்காட்சி நடக்கிறது. இதில், பல வகையான நாய்கள் இடம் பெறுகிறது. போட்டியில் ராஜபாளையம், கேரவன் அவுண்ட், கன்னி, கோம்பை உட்பட பல்வேறு இந்திய வகை நாய்கள் கலந்து கொள்கிறது. மேலும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது என சவுத் இந்தியன் கேனல் கிளப் தலைவர் ரஜினி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

The post கோத்தகிரி நேரு பூங்காவில் இன்று காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article