கணவர் வீட்டில் வரதட்சணை பெற்றேனா? - நடிகை ரம்யா பாண்டியன் விளக்கம்

4 weeks ago 6

சென்னை,

'ஜோக்கர்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அப்படம் தேசிய விருது வென்றதோடு, அதில் நடித்த ரம்யா பாண்டியனின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன.

தொடர்ந்து, 'டம்மி பட்டாசு', 'ஆண் தேவதை', 'நண்பகல் நேரத்து மயக்கம்' 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' ஆகிய படங்களிலும் நடித்தார். 'குக் வித் கோமாளி சீசன் 1', பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிகள் மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது.

கடந்த ஆண்டு லொவல் தவான் என்பவரை ரம்யா பாண்டியன் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் கணவர் வீட்டில் இருந்து ரம்யா பாண்டியன் வரதட்சணை பெற்றதாக தகவல் வெளியானது.

இதனை ரம்யா பாண்டியன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'பள்ளி காலத்தில் இருந்தே என் செலவுகளை நானே கவனித்து வருகிறேன். எனது திருமண செலவில் பாதியை கூட நான்தான் ஏற்றேன். தங்களது வீட்டிற்கு ஒரு பெண்ணை அழைக்கும்போது அவர்களுக்கு ஆடை, நகைகள் கொடுத்து அழைப்பது என் கணவர் வீட்டு குடும்ப வழக்கம். அவர்களின் பழக்கத்தை மதித்துதான் அதனை நான் வாங்கினேன். இதை வரதட்சணை என்று பேசுவது தவறு. அப்படி சொல்லாதீர்கள்'', என்றார்.

Read Entire Article