இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 48 அசிஸ்டென்ட்கள் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Assistant: 34 இடங்கள். சம்பளம்: ரூ.9,300-34,800. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Leading Hand Fireman: 14 இடங்கள். சம்பளம்: ரூ.5,200-20,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயர் பைட்டிங் அப்ளையன்சில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.02.2025.
The post கடலோர காவல் படையில் 48 அசிஸ்டென்ட்கள் appeared first on Dinakaran.