
சென்னை,
கடலூர் ரெயில் விபத்து குறித்து மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"இதயத்தைப் பதைக்க வைக்கும் செய்தி. கடலூர் செம்மங்குப்பம் ரெயில் பாதையில் பள்ளிக்குச் சென்ற ஒன்றுமறியா இளங்குருத்துகள் ரெயில் மோதி இறந்ததை ஒப்பவே மனம் மறுக்கிறது. எவரின் அலட்சியமாக இருந்தாலும் இது மன்னிக்கத் தகுந்ததே அல்ல.
ஏற்றுக்கொள்ளவே முடியாத துக்கம் நிகழ்ந்திருக்கிறது. இனியும் இதுபோன்ற அலட்சிய விபத்துகள் நிகழாமல் தவிர்த்திட அரசும், ரெயில்வே துறையும், உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். உயிருக்கு உயிரான பிள்ளைகளைப் பறிகொடுத்து கலங்கி நிற்கும் பெற்றோர், உறவினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.