
கடலூர்,
சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 ஆம்னி பஸ்கள் சென்றுகொண்டிருந்தன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே வேப்பூர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது முன்னே சென்ற ஆம்னி பஸ் மீது பின்னே வந்த ஆம்னி பஸ் மோதியது. இதையடுத்து, அதன்பின்னே வந்த மற்றொரு ஆம்னி பஸ்சும் மோதியது.
அடுத்தடுத்து 3 ஆம்னி பஸ்கள் மோதிய விபத்தில் 35 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரத்திற்குமேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.