
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டின் சர்வதேச எல்லையில் உள்ள தாஷ்பதான் பகுதியில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான சில நடமாட்டங்களை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கவனித்தனர்.
இதையடுத்து ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்த நபரை வீரர்கள் எச்சரித்துள்ளனர். அதை பொருட்படுத்தாமல் எல்லை பகுதியை கடந்த பிறகும் அவர் நிற்காததால் பாதுகாப்புப்படை வீரர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் ஊடுருவல்காரரின் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று ஜம்மு எல்லைப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.