கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

2 hours ago 1

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பள்ளியரை குப்பத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் (2024-25), நிழல் வளைகுடில் அமைத்து மிளகாய் மற்றும் கத்திரி நாற்றுக்கள் பரப்பப்பட்டிருத்ததை கலெக்டர் பிரதாப் பார்வையிட்டு மிளகாய் நாற்றுக்கு தேவையான மூலப்பொருட்களை விவசாயிகளை தயாரிக்க அட்மா திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்தும் தேவையான விதைகளை துறையின் மூலமாக கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கத்தரி செடியில் பூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். வட்டார அலுவலர் விவசாயிகள் பயிர் சாகுபடியினை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற நோயாளிகளின் எண்ணிக்கை, மருந்துகள் இருப்பு, மகப்பேறு குறித்தும் சத்தரை மேட்டு காலனியில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் பழங்குடியினர்களுக்கு கட்டப்பட்டு வரும் 53 வீடு கட்டும் பணிகள் அனைத்து முடிவுற்று மே இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கல்லம்பேடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் உறுதி திட்டத்தில் வேலை பார்க்கும் பயனாளிகளை கொண்டு ஏலப்பாக்கம் ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாயில் சீரமைப்பு பணி நடைபெறுவதையும் புதுப்பட்டு பகுதியில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயிகளின் சாகுபடி குறித்தும் ஆய்வு செய்தார். அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

கழிப்பறை, குடிநீர் மற்றும் சேதமடைந்துள்ள வகுப்பறை கட்டிடத்தினை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்காக அலுவலரிடம் அறிவுறுத்தினார். கூவம் பகுதியில் கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்ட மக்களுக்கு வர்ணம் திட்டத்தின் கீழ் தொழில் புரிவதற்கான தொழில் கூடத்தினை திறந்து வைத்து செயல் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். கொப்பூர் பகுதியில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டப்பட்டுவரும் திட்ட பணிகளை பார்வையிட்டு மார்ச் இறுதிக்குள் கட்டி முடிக்க கலெக்டர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் (பொ) வேதவல்லி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெபகுமாரி அனி, வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சிவகுமார் உள்பட பலர் இருந்தனர்.

The post கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article