கடப்பா கல் சரிந்து விழுந்ததில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு.!

6 months ago 22
சாத்தூர் அருகே கடப்பாக்கல் லோடு ஏற்றி வந்த மினி ஆட்டோ, பேருந்து மீது மோதி விபத்தில், ஆட்டோவின் பின் பகுதியில் அமர்ந்திருந்த 4 வயது சிறுவன், தலையில் கடப்பா கல் சரிந்து விழுந்ததால் உயிரிழந்தான். ஒத்தையால் கிராமத்தை சேர்ந்த காளிச்சாமி, தமது மகன்கள் கபில் ஆர்யா, விஜயதர்ஷன் ஆகியோருடன், ஏழாயிரம் பண்ணைக்கு சென்று லோடு ஆட்டோவில் கடப்பா கல் வாங்கி வந்தார். வெள்ளையாபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற தனியார் பேருந்தை முந்த முயன்ற போது, எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ மோதியதில், கடப்பா கல் அருகே அமர்ந்திருந்த 2 சிறுவர்கள் மீதும் விழுந்தது. இதில் காயமடைந்த கபில் ஆர்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Read Entire Article