கந்தர்வகோட்டை, மே 10: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் இரண்டாயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்கள் அத்தியசிய தேவைக்கு கந்தர்வகோட்டை அல்லது தஞ்சைக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் நகர பேருந்துகள் மட்டுமே நின்று செல்லும் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பேருந்துக்கு இங்கு அமைந்து உள்ள பயணிகள் நிழற்குடையில் இருந்துதான் பயணம் செய்ய வேண்டும். அனால், இங்கு உள்ள பயணிகள் நிழற்குடை பழுது அடைந்து இருக்கைகள் சேதரமாகியும், தேவையற்ற புல் பூண்டுகள், செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், மக்கள் பயன்பாடு என்பது இந்த நிழற்குடையை பயன்படுத்துவது குறைந்துவருகிறது. சாலையோரத்தில் வெயில், மழையில் நின்று பேருந்துக்கு காந்து இருக்கும் நிலை உள்ளது. எனவே, கோடை வெயிலை கருத்தில் கொண்டு சம்பந்தபட்ட துறையினர் பழைய கந்தர்வகோட்டை பேருந்து நிறுத்த நிழற்குடையை சீர்செய்து தரும்படி பயணிகள் சம்பந்தபட்ட துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பழைய கந்தர்வகோட்டையில் பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.