கறம்பக்குடி, மே 10: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆலங்குடி திருவரங்குளம் பகுதியில் மாதர் தெரசா வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் வேளாண் அனுபவ பணி திட்டத்தின் கீழ் விவசாயிகள் நலன் பெரும் வகையில் வேளாண் கண்காட்சியை நடத்தினர். வேளாண் மாணவிகள் நடத்திய கண்காட்சியில் பாரம்பரிய உணவுகள்,நெல் ரகங்கள், திரவ உரங்கள், உயிரி உரங்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயம் சார்ந்த பொருட்களை காட்சி படுத்தினர். மாணவிகளால் அமைக்க பட்ட கண்காட்சி யை கிராம பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பார்த்து பாராட்டி மாணவிகளிடம் விவசாய குறிப்புகளை கேட்டு தெரிந்து கொண்டனர். மாணவிகளால் நடத்த பட்ட இந்த வேளாண் கண்காட்சியில் வேளாண் கல்லூரி மாணவிகளான ரீகா,ரேஷ்மா சரண், ரெக்சிதா சார்லஸ், ஷர்மிளா, செல்சியா, சிமி ஹெப்சிபா, ஷிவானி, சிவ தாரணி, சவுந்தர்ய காந்தி, நிதி உள்ளிட்ட மாணவிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
The post கறம்பக்குடி அருகே மதர் தெரசா வேளாண்மை கல்லூரி மாணவிகள் கள பணி கண்காட்சி appeared first on Dinakaran.