சாலை சரி செய்ய மக்கள் கோரிக்கை

5 hours ago 2

 

பொன்னமராவதி,மே10: பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டி -ஏனாதி குண்டும் குழியுமான சாலையினை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வலையபட்டி அரசு மருத்துவனை அருகில் இருந்து காயம்புஞ்சை, பிடாரம்பட்டி வழியாக ஏனாதி செல்லும் தார் சாலை தார்கள்பெயர்ந்தும் பல இடங்களில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு சென்று வர முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே பிடாரம்பட்டி-ஏனாதி சாலையினை சீர் செய்து தரமான தார்சாலையாக போடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலை சரி செய்ய மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article