கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம்பெயர்வு என தகவல்

2 hours ago 1

இஸ்லாமாபாத்,

ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. முதல் 5 நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது.இதையடுத்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையை பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில், 'கடந்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து அதிகம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். உயிருக்கு ஆபத்து இருந்தாலும் இந்த சட்டவிரோத இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது. சுமார் 40 சதவீதம் பாகிஸ்தானியர்கள், இடம் பெயர விரும்புவதாக கூறி உள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article