
சென்னை,
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களின் ஒருவரான அமீர் கான் தனது கெரியரில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதில், 'கஜினி'க்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
2008-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி, அமீர்கானின் கெரியரில் கேம் சேஞ்சராகவும் அமைந்தது.
இப்படத்திற்காக அமீர்கானுக்கு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து மிகப்பெரிய பாராட்டுகள் கிடைத்தன.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அமீர்கான், கஜினியின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு சல்மான் கான் கொடுத்த சிறப்புப் பரிசை நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில்,
"கஜினியின் வெற்றிக்கு பின்னர் ஒரு வெற்றி விழாவை நடத்தினோம். அந்த நிகழ்வில் சல்மான் கலந்துகொண்டு அவர் வரைந்த இரண்டு ஓவியங்களை எனக்குப் பரிசளித்தார். அவைகள் என் வீட்டில் உள்ளன' என்றார்.