கச்சத்தீவை மீட்பதுதான் நிரந்தர தீர்வு.. தனித்தீர்மானத்தை கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

2 weeks ago 4

சென்னை: கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து ஒன்றிய அரசு மீட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;

கச்சத்தீவை மீட்பதுதான் நிரந்தர தீர்வு: முதல்வர்
கச்சத்தீவை மீட்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும். இலங்கையில் புதிய அரசு அமைந்தாலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்கிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போது மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை ஒன்றிய அரசு மறந்து விடுகிறது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும்.

இலங்கை கைது செய்த மீனவர்களை பிரதமர் மோடி பேசி மீட்டு வர வேண்டும். ஜெயலலிதா, ஓபிஎஸ் ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோது கச்சத்தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றினர். கச்சத்தீவு மீட்பது தொடர்பாக ஒன்றிய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. நான் முதல்வராக பிறகு பிரதமர் முதல்முதலாக தமிழ்நாடு வந்தபோது கச்சத்தீவை மீட்க கோரிக்கை வைத்தேன். கச்சத்தீவை, மாநில அரசுதான் தாரை வார்த்தது என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post கச்சத்தீவை மீட்பதுதான் நிரந்தர தீர்வு.. தனித்தீர்மானத்தை கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!! appeared first on Dinakaran.

Read Entire Article