கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் படகுகள்... மீன்துறை அதிகாரிகள் நாளை ஆய்வு

4 hours ago 1

சென்னை,

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு வருகின்ற மார்ச் 14, 15 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த ஆலய திருவிழாவிற்கு ராமேசுவரத்தில் இருந்து 90 விசைப்படகுகளும், 22 நாட்டுப்படகுகளும் செல்ல விழா கமிட்டியிடம் பதிவு செய்துள்ளது.

மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படகுகளில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திருவிழாவிற்கு செல்ல பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், கச்சத்தீவு செல்ல உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை நாளை (செவ்வாய்க்கிழமை) மீன்வளத்துறை அதிகாரிகள் படகின் நீளம், அகலம், உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

திருவிழாவிற்கு செல்ல பெயர் பதிவு செய்துள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர்கள் ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு வரும்போது படகின் அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் மீன் துறை அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Read Entire Article