"ஓஹோ எந்தன் பேபி" படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு

5 hours ago 3

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஷ்ணு விஷால். இவருடைய தம்பி ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. கிளிம்ப்ஸ் வீடியோவில் நடிகர்களான மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, விஷ்ணு விஷால் இடம் பெற்றுள்ளனர். இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 'ஓஹோ எந்தன் பேபி' திரைப்படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

A peek into Ashwin and Raveena's sneak Sneak Pink Link : https://t.co/knQFl9pAzbWatch #OhoEnthanBaby in theatres now ✨Ticket Link : https://t.co/hIrgFaYMloA @jenmartinmusic Musical.Directed by @Krishnakum25249. Produced by - @VVStudioz@TheVishnuVishalpic.twitter.com/mtQbLJE619

— Vishnu Vishal Studioz (@VVStudioz) July 12, 2025
Read Entire Article