
ஜன்ட்ஹோவன்,
இந்திய 'ஏ' ஆக்கி அணி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் நெதர்லாந்தின் ஜன்ட்ஹோவன் நகரில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய 'ஏ' அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை பதம் பார்த்தது.
இந்திய அணியில் ஆதித்யா அர்ஜூன் 2 கோலும், பாபி சிங் ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். முந்தைய இரு ஆட்டங்களில் அயர்லாந்தை வென்று இருந்தது. இந்திய அணி மீண்டும் பிரான்சை இன்று சந்திக்கிறது..