ஓரத்தநாடு அருகே குட்கா விற்பனை செய்த ஒருவர் கைது

3 days ago 2

 

ஒரத்தநாடு, மார்ச்29: ஒரத்தநாடு அருகே அருகே தடை செய்யப்பட்ட குட்கா 7.6 கிலோ பறிமுதல் செய்து விற்பனை செய்த பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டர்த்தி கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட இடையாத்தி மந்திகோன் விடுதி கிராமத்தில் ஐயப்பன்(48) என்பவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவரது கடையில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடையில் 7.6 கிலோ குட்கா பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஓரத்தநாடு அருகே குட்கா விற்பனை செய்த ஒருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article