சென்னை: திராவிட இன எழுச்சி, பொங்கும் தமிழ் உணர்வு, பெண் விடுதலை, சமூக நீதிக்கு அடையாளம் பாரதிதாசன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். பாரதிதாசன் கவிதைகள் முழங்கிட கண்டு உள்ளம் பொங்குகிறது; பெருமகிழ்ச்சியால், பேருணர்ச்சியால். தமிழர் குருதியில் பாவேந்தரின் வரிகள் கலந்தோட வேண்டியது காலத்தின் தேவை. தொடர்ந்து கொண்டு செல்லுங்கள்; பாவேந்தரின் கருத்துகளை எல்லோரிடமும். தங்கத் தமிழ் தந்த பாரதிதாசன் புகழ் ஓங்குக, தமிழர் வெல்க என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
The post திராவிட இன எழுச்சி, பொங்கும் தமிழ் உணர்வு, பெண் விடுதலை, சமூக நீதிக்கு அடையாளம் பாரதிதாசன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!! appeared first on Dinakaran.