தேனி, ஜன. 18: தேனி அருகே பூதிப்புரத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் டிஎஸ்பி பண்ணைத் தோட்டத்தில் இருந்த செம்மறி ஆடு மற்றும் சிசிடிவி கேமரா திருடு போனது சம்பந்தமாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி அருகே பூதிப்புரம் மூக்க மூப்பர் தெருவை சேர்ந்தவர் காந்தசொரூபன்(69). இவர் போலீஸ் டிஎஸ்பியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற பிறகு பூதிப்புரம் சன்னாசியப்பன் கோயில் அருகில் காந்தசொரூபனுக்கு தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தினை பராமரித்து வந்த காந்தசொரூபன் தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வந்தார். கடந்த 11ம் தேதி தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்தபிறகு மறுநாள் தோட்டத்திற்கு சென்றபோது தோட்டத்தில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செம்மறி ஆடு மற்றும் தோட்டத்து வீட்டின் முன்பாக பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஓய்வு பெற்ற டிஎஸ்பி பண்ணையில் ஆடு, சிசிடிவி கேமரா திருட்டு appeared first on Dinakaran.