
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் அதிலிருந்து முழுமையாக குணமடைய பல மாதங்கள் ஆகியது.
அதன்பின் குணமடைந்த அவர் உள்ளூர் தொடர்களில் விளையாடி இழந்தை பார்மை மீட்டெடுத்தார். பின்னர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார். தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் அவரால் முன்பு போல் பந்து வீச முடியவில்லை எனவும், அவர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் ரோகித், கோலி வரிசையில் முகமது ஷமியும் ஓய்வு பெற்றுவிடுவார் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஓய்வு குறித்த செய்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முகமது ஷமி, அந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "ரொம்ப நல்லது மகாராஜ். உங்கள் வேலையில் மீதமுள்ள நாட்களை நீங்கள் எண்ண வேண்டும். சில நேரங்களில் நீங்கள் ஏதாவது நல்லதை சொல்ல வேண்டும். இது இன்றைய நாளின் சிறந்த கதை, மன்னிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார்.