ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி மேம்பாலத்தில் மோதிய மாநகர பேருந்தால் பரபரப்பு: பயணிகள் தப்பினர்

2 weeks ago 4

வேளச்சேரி: ஓட்டுனருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் அடையாறு மேம்பாலத்தின் மீது மாநகர பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.  சென்னை மாநகர பேருந்து (தடம் எண் 102) நேற்று முன்தினம் காலை, திருக்கழுக்குன்றம் மானாம்பதியில் இருந்து அடையாறு காந்தி நகருக்கு புறப்பட்டது. ஓட்டுனர் அன்பழகன் (49) பேருந்தை இயக்கினார். சந்திரன் என்பவர் நடத்துனராக இருந்தார். அடையாறு மேம்பாலம் அருகே எல்.பி. சாலையில் இருந்து சர்தார்பட்டேல் சாலைக்கு திரும்பியபோது, டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார்.

இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மேம்பாலத்தின் பக்கவாட்டில் மோதி நின்றது. இதில் பேருந்தின் மேல்பகுதி சேதமடைந்த நிலையில், அதில் இருந்த 5க்கும் மேற்பட்ட பயணிகள் எந்த காயங்களும் இன்றி அதிஷ்டவசமாக தப்பினர். தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து, ஓட்டுனரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அடையாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி மேம்பாலத்தில் மோதிய மாநகர பேருந்தால் பரபரப்பு: பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Read Entire Article