ஓட்டல் அறையில் உல்லாசம்: ஆசை வார்த்தை கூறி 12 பேரை திருமணம் செய்து பணம் பறித்த கில்லாடி இளம்பெண்

1 week ago 2

திருப்பதி,

ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் ராமச்சந்திர புரத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் தன்னுடன் 3 பேரை சேர்த்துக்கொண்டு குழு ஒன்றை உருவாக்கினார். கணவன் - மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற முயற்சிப்பவர்கள், கோர்ட்டில் வழக்கு நிலுவை உள்ள ஆண்கள். திருமணமாகாத சாப்ட்வேர் என்ஜீனியர்கள், பணக்கார வீட்டு பிள்ளைகள், மனைவி வெளிநாட்டில் இருக்கும் கணவர்மார்களை குறித்துவைத்து பணம் பறிக்க திட்டமிட்டார்.

இளம்பெண் இது போன்ற ஆண்களிடம் முதலில் நலம் விசாரிப்பது போல் நடிப்பார். பின்னர் நெருக்கமாக பழக ஆரம்பிப்பாராம். பிறகு நெருக்கமான பழகும் ஆண்களிடம் ஆசைவார்த்தை கூறி அன்பு மழை பொழிவாராம். அப்போது நெருங்கி அவரது ஆசைவலைக்குள் விழும் ஆண்கள் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டு அவர்கள் சம்மதம் தெரிவித்தபின்பு தனது குழுவினருடன் சேர்ந்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டு விடுவார்.

பின்னர் திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டுக்கு செல்லாமல் கணவருடன் ஓட்டல் அறையில் தங்கி உல்லாசமாக இருந்தார். அப்போது அந்த குழுவினர் ரகசியமாக வீடியோ படம் எடுத்துக்கொண்டனர்.வீடியோ படங்களை காண்பித்து லட்சக்கணக்கில் பணம் பறிப்பார்கள், பணம் தர மறுப்பவர்களை வீடியோ படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக வழக்கு தொடர்வதாகவும் கூறி மிரட்டல் விடுத்தனர். குடும்ப கவுரம் கருதி அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் இளம்பெண் 12 பேரை ரகசிய திருமணம் செய்து கோடிக்கணக்கான ரூபாயை அபகரித்து உள்ளனர். இளம்பெண்ணிடம் பணத்தை இழந்த 12 பேர் நேற்று ராமச்சந்திராபுரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அதில் இளம்பெண் தங்களிடம் இருந்து பறித்த பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர். போலீசார் இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து இளம்பெண் கூறியதாவது:-

சிலர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். பொய்யான புகார் கொடுத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன். என் மீது பொய்யான புகார் தெரிவிக்கும் 12 பேரையில் நேரில் அழைத்து வந்து உண்மையை கண்டறிய வேண்டும். குற்றச்சாட்டை அவர்களால் நிரூபிக்க முடியுமா? என இளம்பெண் சவால் விட்டார். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article