டி.என்.பி.எல்.இறுதிப்போட்டி: திருப்பூருக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு

2 hours ago 2

டி.என்.பி.எல். கிரிக்கெட்

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இதில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி திருப்பூர் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

Read Entire Article