
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த 22 வயது இளைஞர் ஜெர்மனியில் உள்ள கல்லூரியில் இன்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வந்தார். தனது குடும்பத்தினரை காண விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த மாணவர், விடுமுறை முடிந்து மீண்டும் ஜெர்மனி புறப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், குடியிருப்பு அனுமதிக்கான நகல் மாணவரிடம் இல்லாததால், அவரை விமானத்தில் ஏற விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவர், விமான நிலையத்திற்கு வெளியே நின்ற ஒரு ஆட்டோவில் ஏறி கோரேகான் பகுதிக்கு சென்றார்.
பின்னர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 45-வது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஆரே காலணி போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.