ஓடும் ரெயிலில் வந்த தீப்பொறி.. பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்

4 hours ago 2

லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் பரேலி-காசிப்பூர் இடையே டீசலில் இயங்கும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில், நேற்று பரேலி ரெயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டபோது, என்ஜின் பகுதியில் தீப்பொறியும், புகையும் வருவதை என்ஜின் டிரைவர் கண்டுபிடித்தார்.

இதையடுத்து உடனடியாக ரெயிலை நிறுத்திய என்ஜின் டிரைவர், ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அதற்குள் பயணிகளுக்கு தகவல் தெரிந்தது. அவர்கள் அலறியடித்துக் கொண்டு ரெயிலில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். தீப்பொறி எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடித்து, சரி செய்யப்பட்டது. பின்னர், ரெயில் புறப்பட்டுச் சென்றது. இதன்மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

Read Entire Article