ஓஎம்ஆர் சாலையில் வாகன சோதனை; ஆட்டோவில் 227 கிலோ குட்கா கடத்திய 2 பேர் கைது

1 day ago 2

சென்னை: தரமணி ஓஎம்ஆர் சாலையில் நடந்த வாகன சோதனையின் போது, ஆட்டோவில் 227 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் பெருநகரம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கோட்டூர்புரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தரமணி ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரே திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அதிவேகத்தில் ஆட்டோ ஒன்று வந்தது. உடனே போலீசார் ஆட்டோவை வழிமறித்த போது, நிற்காமல் செல்ல முயன்றனர்.

பின்னர் போலீசார் அதிரடியாக ஆட்டோவை இடமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 227 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பிறகு குட்கா பொருட்களை கடத்தி வந்த பாடியநல்லூர் வடிவேல் நகர் 1வது தெருவை சேர்நத் ஷாயின்ஷா(37), பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்த கிட்டு(50) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post ஓஎம்ஆர் சாலையில் வாகன சோதனை; ஆட்டோவில் 227 கிலோ குட்கா கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article