
மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் 'கோதா', 'மின்னள் முரளி' படங்களின் மூலம் பிரபல இயக்குநராக அறியப்படுகிறார். இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகராகவும் வலம்வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சூக்ஷமதர்ஷினி, பொன்மேன்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் கடந்த மாதம் 'மரணமாஸ்' படம் வெளியானது. இப்படத்தில் ஒரு வித்தியாசமான பன்கி கேர் ஸ்டைலுடன், வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சிவபிரசாத் இயக்கியுள்ளார். இதன் கதையை சிஜு சன்னி எழுதியுள்ளார். இதில் ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, புலியனம், சுரேஷ் கிருஷ்ணா, பாபு ஆண்டனி மற்றும் அனிஷ்மா அணில்குமார் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தியேட்டர்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மரணமாஸ்' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. அதாவது, மரணமாஸ் படம் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வருகிற 15-ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.