
மும்பை,
ஏர்டெல் நிறுவனம், தனது டி.டி.எச். சேவையை டாடா குழுமத்துடன் இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கடந்த 26-ந் தேதி அறிவித்தது. டிடிஎச் சேவையில் முன்னணியில் இருக்கும் இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பெரும் கவனம் பெற்று இருந்தது.
இந்நிலையில், அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு விட்டதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. திருப்திகரமான தீர்வு எட்ட முடியாததால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக மும்பை பங்குச்சந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனங்களின் இணைப்பு சாத்தியப்பட்டிருந்தால், கடந்த 2016-ல் டிஷ் டிவி - வீடியோகான் 'டிடிஎச்' இணைப்பிற்கு பின், டி.டி.எச்., துறையின் இரண்டாவது இணைப்பாக இது இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.