
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் குஞ்சாக்கோ போபன். இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'ஆபிசர் ஆன் டூட்டி'. இந்த படத்தில் நடிகை பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஜெகதீஸ், விசாக் நாயர், உன்னி வாலு, ஸ்ரீகாந்த முரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஷாகி கபீர் எழுத்தில் ஜித்து அஷ்ரப் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் சுமார் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இப்படத்தின் ஓ.டி..டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 20-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.