ஒவ்வொரு சாதனைக்கும் பின்னால் கடின உழைப்பு: நீதிபதி லட்சுமி நாராயணன் உருக்கம்

2 weeks ago 2

சென்னை: ஒவ்வொரு சாதனைக்கும் பின்னால் கடின உழைப்பு இருக்கும் என்று ரோட்டரி சங்க விருது விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உருக்கத்துடன் கூறினார். சென்னை மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி கிளிட்டரிங் ஸ்டார் விருது வழங்கும் விழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில், கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிக்காக சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடிக்கும், பத்திரிகை, கலை, பொது சேவைக்காக ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநர் வி.முரளிக்கும், மருத்துவம், ஆராய்ச்சி, சமூக சேவை ஆகிய பணிகளுக்காக சவீதா நிகர்நிலை பல்கலைக் கழக வேந்தர் என்.எம்.வீரய்யனுக்கும் ரோட்டரி வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

Read Entire Article