
சென்னை,
கடந்த மே 1-ந் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் 'டூரிஸ்ட் பேமிலி மற்றும் ரெட்ரோ' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இந்த 2 படங்களுமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களில் வசூல் குறித்த விவரத்தை காண்போம்.
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் குடும்ப கதையில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் இதுவரை ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் ஆக்சன், காதல் கதையில் வெளியான 'ரெட்ரோ' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை உலக அளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படி இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால், வார இறுதி நாள்களான இன்றும், நாளையும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.