
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புரமோசனில் பேசிய சல்மான் கான், ரஜினி, விஜய்யை பாராட்டினார். அவர் கூறுகையில்,
'ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், சூர்யா போன்ற நடிகர்கள், ஒரு சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிகிறீர்கள் என்ற உணர்வை உங்களுக்கு ஒருபோதும் தர மாட்டார்கள். நாங்கள் இப்போது எப்படி இருக்கிறோமோ அதை உருவாக்கியது எங்களது ரசிகர்கள்தான். நம்மை எப்போது பெரியவராக நினைக்கிறோமோ அந்நாளில் நம் கெரியர் முடிந்துவிடும்' என்றார்.