ஒருநாள் கிரிக்கெட்; அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

3 months ago 24

அபுதாபி,

அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் 139 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 343 ரன் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சதம் (112 ரன்) அடித்து அசத்தினார். இதையடுத்து 344 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

வெறும் 30.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அயர்லாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக க்ரேக் யங் 29 ரன் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிசாட் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் 174 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.

Read Entire Article