ஒரு தேர்வு ஒருபோதும் உங்களை வரையறை செய்து விடாது; மாணவ மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

9 hours ago 3

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பிரதமர் மோடி இன்று வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய மனவுறுதி, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் வெளிப்பாடு இது.

இன்றைய தினம், நீங்கள் இந்த உயரம் அடைவதற்காக பங்காற்றிய பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மற்ற அனைவரையும் அங்கீகரிக்கும் தினமும் ஆகும். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அவர்களின் முன்னால் உள்ள அனைத்து வித வாய்ப்புகளிலும் மிகப்பெரிய வெற்றிகளை பெற வாழ்த்துகள். தேர்வு முடிவால் சற்றே மனவருத்தம் அடைந்த மாணவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன்.

ஒரு தேர்வு ஒருபோதும் உங்களை வரையறை செய்து விடாது. உங்களுடைய பயணம் மிக பெரியது. உங்களுடைய வலிமைகள் மதிப்பெண் சான்றிதழை கடந்தும் செல்லும். நம்பிக்கையுடன் இருங்கள். ஆர்வத்துடன் இருங்கள். ஏனெனில் பெரிய விசயங்கள் காத்திருக்கின்றன என அவர் தெரிவித்து உள்ளார்.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் 93 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் 88.39 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த இரு தேர்வுகளிலும் மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளனர்.

Read Entire Article