
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை இவானா. இவர் தற்பொழுது தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் தற்பொழுது சிங்கிள் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்க ஸ்ரீ விஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் கெட்டிகா ஷர்மா மற்றும் வென்னிலா கிஷோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீதாராமம் புகழ் விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை கல்யா பிலிம்ஸ் பேனரின் கீழ் வித்யா கோப்பினிடி, பானு பிரதாபா மற்றும் ரியாஸ் சௌதர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இப்படம் ஒரு முக்கோண காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. கதாநாயகனான ஸ்ரீ விஷ்ணு, கெட்டிகா ஷர்மாவை காதலிக்கிறார் ஆனால் கெட்டிகாவுக்கு இவரை பிடிக்கவில்லை. ஆனால் இவானானிற்கு ஸ்ரீயை பிடித்துள்ளது ஆனால் ஸ்ரீக்கு இவானாவை பிடிக்கவில்லை. இப்படி ஒரு சூழலில் சிக்கி தவிக்கும் கதையாக இப்படம் அமைந்துள்ளது.
திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் 19 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.