பெங்களூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் நீட்டிப்பு

4 hours ago 5

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் வடக்கு திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் வசதிக்காக மேலும் நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, பெங்களூருவில் இருந்து அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி முதல் செப்டம்பர் 26-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) வடக்கு திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06555) சேவை நீட்டிக்கப்படுகிறது. அதே போல, வடக்கு திருவனந்தபுரத்தில் இருந்து அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் செப்டம்பர் 28-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) பெங்களூருவிற்கு சிறப்பு ரெயில் நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article