அரியலூர், டிச. 17: அரியலூர் பெரிய அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஒப்பில்லாதம்மன் கோயில் தேரோடு வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மாவட்ட கலெக்டர் ரத்தினசாமியிடம் ஆதின பரம்பரை தருமகர்த்தாவும், ஜெமீன்தாருமான கே.ஆர்.துரை உள்ளிட்டோர் நேற்று மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: அரியலூர் நகரில் 500 ஆண்டுகள் பழமையான ஓப்பில்லாதம்மன் கோயில் உள்ளது. ஜெமீன் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்துக்கு உட்பட்ட இக்கோயிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 23.6.1942ல் நடைபெற்றது.
அதன்பின்பு 82 ஆண்டுகள் தடைப்பட்டு, தற்போது ஒரு நாள் உற்சவமாக சித்திரை பௌர்ணமி அன்று திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தேர்திருவிழா நடத்துவதற்கு தயராக உள்ள நிலையில், தேரோடு வீதிகளான பொன்னுசாமி அரண்மனைத் தெரு, கைலாசநாதர் கோயில் தெரு, பெரிய அரண்மனைத் தெரு, ஓப்பில்லாதம்மன் கோயில் தெரு, வ.உ.சி தெரு ஆகிய தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அதிக்களவில் உள்ளன. எனவே தேரோடும் வீதிகளான மேற்கண்ட தெருக்களின் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.
The post ஒப்பில்லாதம்மன் கோயில் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.