ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

3 weeks ago 5

சென்னை; இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த டிச.20-ல் இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 6 பேர் நாகை மீனவர்களை தாக்கியுள்ளனர். இரண்டு நாட்டுப் படகுகளில் பயணித்த 6 மீனவர்களில் 3 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். மீன்பிடி படகுகளில் இருந்து ஜிபிஎஸ் கருவிகள், வலைகள், கையடக்க தொலைபேசிகளையும் கொள்ளையடித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article