பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் 226 மனுக்கள் பெறப்பட்டன

3 hours ago 2

* மாற்றுத்திறனாளிகள் மனு மீது தனி கவனம்
* துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

பெரம்பலூர், ஜன.21: பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 226 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், நேற்று(20 ஆம்தேதி) திங்கட்கிழமை காலை, பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக் களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பொது மக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித் தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமைதொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்டக் கலெக்டர், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத் திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும் அனைத்து அரசுதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 226 மனுக்கள் பெறப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் (பொ) சொர்ண ராஜ், பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு அலுவ லர் சுந்தரராமன், பிற்படுத் தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ்குமார், ஆதிதிராவி டர் நல அலுவலர் வாசுதேவன், உதவிதிட்ட அலுவலர்(உட்கட்டமைப்பு) பார்த்தசாரதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள் ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் 226 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Read Entire Article