பெரம்பலூர்,ஜன.21: பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவரது செய்திக்குறிப்பு: தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க ஒரு நபருக்கு ரூ50ஆயிரம் நிதி உதவி வழங்கி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 18 வயது முதல் 45வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக் கலாம்.
இதற்காக விண்ணப்பிக்கும் நபர் இதுநாள் வரை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க நிதி உதவி பெறாதவராக இருக்க வேண்டும். எனவே, தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்றுச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-02 ஆகிய வற்றுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் வருகிற 27ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.